Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்கில் புகுந்த கடத்தல் கும்பலின் CCTV காட்சி …!!

நெல்லையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயுதங்கள் கொண்டு ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இரவு 10 மணியுடன் விற்பனையை முடித்துவிட்டு பங்க் அலுவலக அறையில் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நடுஇரவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி கேட்டனர்.

ஊழியர்கள் மறுக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கம்பியால் ஊழியர்களை தாக்கினர். பின்னர் ஊழியர்களை மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த பணத்தையும் எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஊழியர்கள் தனியாரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |