Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கோவிந்தராஜை கொடூரமான முறையில் அடித்து கொலை செய்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கேசவன் மற்றும் விஜி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கைது செய்யப்பட்ட ராஜு ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |