ஸ்லோவாக்கியில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனை பேராசிரியர் ஸ்டீபன் கெலன் என்பவர் பெட்ரோல் மூலம் இயங்கும் நவீன ஏர் காரை வடிவமைத்துள்ளார். இது பார்ப்பதற்கு பெராரி கார்போல் காட்சியளிக்கும் இது இரண்டரை நிமிடத்தில் பறக்கும் விமானம் ஆக மாறிவிடும். பிஎம் டபிள்யூவின் இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வானில் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறக்க கூடிய இந்த ஏர் காரின் சோதனை ஓட்டம் ஸ்லோவாக்கிவில் உள்ள இரண்டு விமான நிலையங்களுக்கு இடையே வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இந்த ஏர் காரை தயாரிக்க 17 கோடி செலவானதாக பேராசிரியர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார். மேலும் இது 8200 அடி உயரத்தில் சுமார் 1000 கிலோ மீட்டர் பறக்கும் என்று கூறப்படுகிறது. இது பெட்ரோல் மூலம் இயங்க கூடியது என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.