தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசும், மத்திய அரசும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 4 ரூபாயாகவும் குறைக்க வேண்டும்.
மேலும் இது அடிப்படைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை குறைவதற்கும் வழிவகுக்கும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பண வீக்கத்தை குறைக்கும் வகையிலும் அரசு போக்குவரத்து கழகங்களின் இழப்பீட்டை குறைக்கும் வகையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.