Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை நீங்கள் உயர்த்திவிட்டு…. எங்களை குறைக்க சொல்வது சரியா?…. அமைச்சர் பிடிஆர் தகவல்….!!!!

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று திடீரென குறைத்து அறிவித்தது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு மக்களிடையே சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்த போது பல மாநிலங்கள் வரியை குறைக்காமல் இருந்தது. எனவே தற்போதாவது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. 2014- முதல் பெட்ரோல் ரூ. 23(250%), டீசல் ரூ.29 (900 %) என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50 சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். இது எந்தவிதத்தில் சரி. இதுதான் கூட்டாட்சியா? என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |