விழுப்புரம் அருகே அன்னியூரில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை, அரசியல் தலைவராக ஒருவர் கேள்வி கேட்டார்கள் என்றால் பதில் சொல்வது அரசியல்வாதியின் கடமை. எந்த மக்கள் கேள்வி கேட்டாலும் கூட பதில் சொல்வது எங்களுடைய கடமை. அதுதான் மோடிஜியின் கடமை.
பாரதிய ஜனதா கட்சி பெட்ரோல் விலை 35 ரூபாய் குறைப்பதற்கு தயாராக இருக்கின்றோம், குறையும். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டுவந்து பெட்ரோல் விலை குறைப்பதற்காக எல்லா முயற்சியையும் எடுத்தாச்சு நண்பர்களே என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.