Categories
அரசியல்

பெட்ரோல் விலை இனி உயராதா ? பாஜக தலைவர் விளக்கம் ..!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், 2014க்கு முன்னாடி ஆட்சியில் இருந்தது திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரசும். தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். யாராவது நம்முடைய கிராமப்புற தாய்மார்களை பற்றி சிந்தித்தார்களா ? ஆனால் 2014க்கு பிறகு மோடிஜி அவர்கள் இலவசமாக 5,6 வருடத்திற்குள் இந்தியா முழுவதும் அனைத்து வீடுகளும் இலவசமாக  கழிப்பறை  கட்டிக் கொடுத்துள்ளார். இதைப்பற்றி திமுக நினைத்தார்களோ ?

அதே போல தான் இலவசமாக 8 கோடி பேருக்கு கேஸ் இணைப்பு கொடுத்துள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 35 லட்சம் பேருக்கு இலவசமாக கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயராமல் இருக்கின்றது. இதற்க்கு தேர்தல் தான் காரணம் என்கீறார்கள் என்ற கேள்விக்கு,

பெட்ரோல் விலை உயர்ந்தால் உயருதுனு சொல்லுறீங்க ? மாறாமல் இருந்தால் மாறாமல் இருக்குனு சொல்லுறீங்க ? மக்களுடைய நலனை பாருங்க என தெரிவித்தார். பின்னர் தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலை உயராது என சொல்லுறீங்களா ? என்ற கேள்விக்கு, இது சர்வதேச விலை பொறுத்தது என பாஜக மாநில தலைவர் தெரிவித்தார்.

Categories

Tech |