இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, எரிபொருள் விலை வரலாறு காணாத வகையில் மோடி ஆட்சியில் அதிகரித்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து இவ்வளவு பெரிய விலை ஏற்றத்தை இதுவரை சந்தித்ததில்லை. பேரறிஞர் மன்மோகன்சிங் அவர்கள் இந்திய பிரதமராக இருந்த பொழுது கச்சா எண்ணெய் விலை 108டாலர் விற்ற பொழுதும் கூட 70 ரூபாய்க்கு அவர் பெட்ரோலை விற்பனை செய்தார்.
ஆனால் இன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 55, 56 டாலர் இருக்கின்ற பொழுது மோடி அவர்கள் பெட்ரோலை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல பெட்ரோல், டீசல் விலையை கூட கட்டுப்படுத்த முடியாத மோடி அரசாங்கம் குறைந்த பட்சம் மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை கேட்க வேண்டும். இவைகளை எப்படி குறைப்பது ? எப்படி கட்டுபடுத்துவது ? என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .
அப்படி செய்யாமல், இன்றைக்கு மோடி அரசாங்கம் – மோடி இருவருமே ஒரு பதில் சொல்கிறார்கள். அது தவறான விஷயம், இந்தியாவினுடைய பொருளாதாரம் இதனால் பெருமளவில் பாதிக்கும். இன்றைக்கு இந்தியாவில் ஒரு டூ வீலர் இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்ல முடியும்.
கிராமத்தில் குறைந்தபட்சம் தொண்ணூறு சதவீதம் டூ வீலர் வச்சிருக்காங்க. அவர்கள் நூறு ரூபாய் கொடுத்து பெட்ரோல் போடுவது என்று சொன்னால், அந்த குடும்பம் பாதிப்பது மட்டுமல்ல, இந்திய பொருளாதாரம் பாதிக்கும். நாங்கள் கண்ணீர் விட்டு சொல்லுகிறோம், இந்த தேசத்தை சிறுக சிறுக மோடி அரசாங்கம் பொருளாதாரம் தெரியாத காரணத்தினால் சிதைத்து வருகிறார்கள். இதை தமிழக காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.