Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு….. காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டம்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலை இழந்து தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக இன்று  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. தமிழகத்தில் இந்த வாரம் 100 ரூபாயைத் தொட்டு விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விட்டுவிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது.பெட்ரோல் நிலையங்களுக்கு முன்பு அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Categories

Tech |