Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை உயர்வு: நண்பா ஸ்வீட் எடு கொண்டாடு…. இது வேற மாறி போராட்டம்…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக 11 மாநிலங்களில் 100 ரூபாயை பெட்ரோல் விலை எட்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலையை அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.

இதனை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி நகரகுழு சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதில் நகர தலைவர் ரஞ்சித் தலைமையில் பெட்ரோல் போட வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி
தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி கோஷங்களை எழுப்பி உள்ளனர்.

Categories

Tech |