நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.37 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டும் நிலையில் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். காரில் போவதைவிட சைக்கிளில் சென்றால் உடல் நலம் மேம்படும் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.