இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்ட நிலையில் அதனை கிண்டல் செய்து ஒருவர் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட வந்தது. அதன் பிறகு ஜூன் மாதம் முதல் விலை அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்போது 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் வகையில் ஒருவர் கையில் பேட்டுடனும், ஹெல்மெட்டுடனும் பெட்ரோல் டேங்க் முன்பு போஸ் கொடுத்தபடி நிற்கிறார். கிரிக்கெட் வீரர்கள் சதம் அடித்து விட்டால் கொடுக்கும் போசை, பெட்ரோல் விலை சதம் அடித்ததற்கு கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.