தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தங்களது கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு மக்களின் துன்பங்களை அறிந்த அரசு. பெட்ரோல் விலையைக் குறைக்கவும் தயாராக உள்ளோம். தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 குறைக்க பாஜக தயாராக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.