நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.52 என விலை நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு கொடுப்பதாகவும், அதனை தமிழக அரசு 100 ரூபாய்க்கு விற்பதாகவும் பொய்ச் செய்தி வெளியாகியது. இதனையடுத்து உண்மையான பெட்ரோல் விலை நிர்ணயம் விவரம் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு வழியில் 57 காசுகள் மட்டுமே மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும், அதில் தமிழகத்துக்கு 2 காசுகள் மட்டுமே கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.