நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. தமிழகம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது.
இதனைத்தொடர்ந்து, பல மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான தங்கள் மாநில அரசின் வரியை குறைத்து வருகின்றன. அந்தவகையில் டெல்லி அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.8 குறைத்து உத்தரவிட்டுள்ளது.