தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது.
இவற்றில் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் பெட்ரோல் டீசல் ஸ்டாக் இல்லை என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றதாக தெரிகிறது. பகல் நேரங்களில் மட்டுமே பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களாக பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லைஎனக்கூறி திடீரென பங்குகள் மூடப் பட்டிருக்கின்றது. இந்த பகுதியில் மொத்தம் உள்ள பெட்ரோல் பங்குகளில் 11 பங்குகள் மூடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரே ஒரு பங்கில் மட்டும் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பெட்ரோல் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கேட்கும் அதைவிட குறைவான அளவு பெட்ரோல் போடுகின்றார்கள். அடுத்தடுத்த நாட்களில் மேலும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அஞ்சி பிளாஸ்டிக் கேண்களில் பலர் பெட்ரோல் வாங்கி செல்கின்றனர். இதுபற்றி பெரியகுளம் நகர் நல சங்கத்தின் தலைவர் விஜயகுமார் பேசும்போது பெரியகுளம் பகுதியில் இந்தியன் ஆயில் இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் போன்ற 12 பெட்ரோல் நிலையங்கள் உள்ளது. இவற்றில் கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அதிகமாகவே காணப்படுகின்றது. இதுபற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கேட்கும்போதும் பனிரெண்டாயிரம் பெட்ரோல் டன் வரக்கூடிய இடங்களில் 4000 பெட்ரோல் டன் மட்டுமே வருகிறது. அதனால் எப்படி சப்ளை செய்ய முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இது மத்திய மாநில அரசுகள் எண்ணை நிறுவனங்களின் கவனக்குறைவு தான் காரணம் என நாங்கள் தெரிவிக்கின்றோம். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பெட்ரோல் டீசல் இருக்கின்றது.
மேலும் இவை எளிதில் தீ பிடிக்க கூடிய பொருளாக இருப்பதால் விபத்தில் சிக்கும் சூழல் வரக்கூடும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு சூழல் இலங்கை போல பொருளாதார நெருக்கடி வந்துவிடுவோம். பாகிஸ்தான் போல பிரச்சினைகள் வந்து விடுமோ என்று மக்கள் அஞ்சும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது. பெரியகுளம் பகுதியில் மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினைகளை மற்ற பகுதிகளிலும் இந்த பிரச்சனைகள் உள்ளதா என தெரியவில்லை உடனடியாக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.