Categories
தேசிய செய்திகள்

” பெண்களை சீண்டினால் சங்கு தான்” இனி எட்டி உதைத்தால் போதும்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

சமீப காலமாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தண்டனைகள் கொடுத்தாலும் பாலியல் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகள் வெளியில் சென்றால் பாதுகாப்பாக இருப்பார்களா? என்ற அச்சத்தினுடைய அச்சத்தோடு பெற்றோர்கள் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க பெண்களுக்கென பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணி ஒன்றை கர்நாடகாவை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி உருவாக்கியுள்ளார். யாரவது பாலியல் ரீதியாக சீண்டினால், இந்த காலணியால் உதைத்தால் போதும், அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து நிலைகுலைந்துவிடுவர். இந்த காலணியில் ஜிபிஎஸ் வசதியும் உள்ளது. இந்த கண்டுபிடிப்புக்காக, விஜயலட்சுமி சமீபத்தில் சர்வதேச விருதும் பெற்றுள்ளார்.

Categories

Tech |