பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார்.
அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என எடுத்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இவர் சொன்னது எதுவும் நடக்காததால் ஏமாந்து போன பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.