Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெண்களிடம் சங்கிலி பறிப்பு…. சோதனையில் மடக்கிய போலீஸ்…. வாலிபர்கள் கைது….!!

பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சிவசங்கரன் (20 ), தஞ்சை மாவட்டம் தியாக சமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு பேரும் நகையை பறித்து சென்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது பேரளம் அருகே உள்ள கம்பீர் பகுதியை சேர்ந்த அமுதவல்லி, சரபோஜி ராஜபுரம் பகுதியை சேர்ந்த கீதா ஆகிய இரண்டு பேரிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்றதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

இந்நிலையில் பேரளம் போலீசார் நேற்று கீரனூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் போது சிவசங்கரன், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் பிடித்ததாகவும் அவர்களிடமிருந்து 4 பவுன் நகைகளை பறிமுதல் செய்ததாகவும் தெரியவந்தது.

Categories

Tech |