சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்துச் என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த லக்ஷ்மி வேலை முடித்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டுருந்தார். இவர் பார்த்தசாரதி கோவில் தெருவில் தனியாக நடந்து சென்றபோது இளைஞர் ஒருவர் நொடிப்பொழுதில் அவரது தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞர் மற்றொருவரிடம் செயினை ஒப்படைத்துவிட்டு மாயமானார்.
போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சொரி விஜய் மற்றும் சக்திவேல் ஆகியோர் சிறுவனுக்கு பயிற்சி அளித்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்ட ஆறு மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.