மாசித் திருவிழாவை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது. கொடியேற்றம் ஆனது காலை ஏழரை மணி முதல் 9 மணிக்குள் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வருகை தந்து குத்துவிளக்கு ஏற்றி வைக்க உள்ளார். நாளை முதல் தொடர்ந்து 10 நாட்கள் மாசித் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.