கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமேஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் மட்டும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் இங்குள்ள வீடுகள் அனைத்தும் மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்டுள்ளது. இதற்கு மான்யட்டா குடிசைகள் என்று பெயர். அதிலும் பாதுகாப்பிற்காக குடிசைகளை சுற்றி முள்வேலிகளை அமைத்துள்ளனர்.
இந்த கிராமமானது 1990 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்காக உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து இங்கு வன்முறை, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து வாழத் தொடங்கினர். இதுவரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை சற்று கடினமாக இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.
ஏனெனில் அவர்கள் ஆண்களினால் ஏற்படும் இன்னல்களை சந்திக்காமல் வாழ்வதாக கூறப்படுகிறது. அதிலும் இந்த கிராமத்தை பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாழ அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கிராமமானது சிறு பெண் குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி என அனைவருக்கும் பெண்களின் சொர்க்க பூமியாக உள்ளது.