Categories
தேசிய செய்திகள்

பெண்களின் துணிகளை துவைக்கும்படி நூதன தண்டனை… தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்ற பணி செய்ய தடை….!!!

பெண்ணை மானபங்கம் படுத்திய வழக்கில் கிராம பெண்களின் துணிகளை துவைக்குமாறு வாலிபருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிபதிக்கு நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் மதுபாணி மாவட்டத்தை சேர்ந்தவர் லாலன் குமார் 20 வயதான இந்த வாலிபர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணை மானபங்கம் படுத்தியதாக அவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி வாலிபர் தொடர்ந்த வழக்கை சஞ்சர்ப்பூர் கூடுதல் சென்சஸ் நீதிமன்ற நீதிபதி அவினாஷ் குமார் விசாரித்தார். பின்னர் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வாலிபருக்கு ஜாமீன் வழங்கினார்.

அதன்படி வாலிபர் தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் சேலைகளை இலவசமாக ஆறு மாதத்திற்கு சலவை மற்றும் அயன் செய்ய வேண்டும். அதனை ஊர் பஞ்சாயத்து தலைவர் கண்காணித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அவர் இதை செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர் அதனை தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வித்தியாசமான தீர்ப்பு அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்புக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான பாட்னா கோர்ட் நிர்வாகம் ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நீதிபதி அவினாஷ் குமார் நீதிமன்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பீகார் கோர்ட் நீதிமன்ற நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |