திருச்சி மகளிர் காவல்துறை அதிகாரிகள் வளர்ந்து வரும் இளம் பெண்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையத்தின் அதிகாரிகள் விளந்தை கிராமப்பகுதியில் உள்ள அங்கன்வாடியில் வைத்து வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். இதில் இன்ஸ்பெக்டர் கிருபா லக்ஷ்மி, வக்கீல் ராமச்சந்திரன் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயானா போன்ற பலர் கலந்துகொண்டனர்.
இந்த முகாமில் அதிகாரிகள் இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளனர். இதனை அடுத்து வளரும் இளம் பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழாவின் முடிவில் மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஏட்டு கோகிலா என்பவர் நன்றியுரை கூறி விழாவினை சிறப்பாக முடித்து வைத்துள்ளார்.