சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்பயா திட்டத்தின்கீழ் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1604 ஸ்மார்ட் சிசிடிவி கேமரா கம்பங்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2013 ஆம் ஆண்டு நிர்பயா திட்டத்தை உருவாக்கி 2000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இந்தத் திட்டத்தின்கீழ் சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 வகையான திட்டங்களை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 95 கோடி ரூபாய் மதிப்பில் 1604 நவீன கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட் கம்பங்கள் நிரப்பப்படவுள்ளன.
அபாய நிலையில் இருக்கும் பெண்கள் இந்த கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் கேமராக்கள் 180 டிகிரி கோணத்தில் சுழன்று படமெடுத்து உடனடியாக காவல் துறைக்கு அனுப்பி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.