Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பின்னாலேயே சென்று வேட்டியால் முகத்தை மூடி…. சில்மிஷம் செய்த ஆசாமி…. அலேக்காக தூக்கிய போலீஸ்….!!!!

கேரளாவில் வேஷ்டியால் முகத்தை மறைத்து ஆசாமி ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு என்ற 34 வயதுமிக்க ஒருவர் பாலக்காடு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் தனிமையில் வீடு திரும்பும் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்களின் பின்னாலையே சென்று திடீரென தன் வேட்டியை அவர்களின் முகத்தில் போட்டு மூடிவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

அதேசமயம் பாலியல் சீண்டல் முடிந்ததும் கண்ணிமைக்கும் நொடியில் மறைந்தும் விடுவார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். இதனைப் போலவே அவர் பல பெண்களுக்கும் இது போன்ற பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |