Categories
உலக செய்திகள்

பெண்களின் மத்தியில் புதிய ஆதரவலைகளை ஏற்படுத்துமா….? ரிஷி சுனக்கின் பேச்சு….!!!!!!!!

இங்கிலாந்து நாட்டில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகி இருக்கின்ற நிலையில் புதிய பிரதமர்  தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றார். பிரதமர் நாற்காலியை பிடிக்க இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கும்  அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ் டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் ரிஷி தனது பிரச்சார அறிக்கை வெளியிட்டு பேசி இருக்கின்றார். அதில் அவர் கூறியிருக்கின்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

*பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலில் வன்முறை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

*பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் முற்றிலும் வீழ்த்தப்படுகின்ற வரையில் அவை தேசிய அவசர நிலையாக கருதப்படும். மேலும் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக அவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் மாலையில் நடைபயிற்சியும் இரவில் கடைகளுக்கும் சென்று வர வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

*நான் இன்னும் அடுத்த நிலைக்கு செல்கின்றேன் பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களை அந்தரங்க படங்கள் எடுத்து துன்புறுத்தினால் அதை கிரிமினல் குற்றமாக்கி அந்த கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

*பெண்களை வேட்டையாடுகிற ஆபத்தான குற்றவாளிகளை பிடிப்பதில் இருந்து நம்மை தடுக்க முடியாது. ஆனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் அன்றாட வாழ்க்கை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகின்ற வரையில் நான் ஓயமாட்டேன்.

*நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறுமிகளின் தொலைபேசி எண்களை சந்தேக நபர்கள் வைத்திருந்தால் எதற்காக அவர்கள் அந்த எண்கள் தொடர்பு விவரங்களை வைத்திருக்கின்றனர் என்பதை விளக்கும்படி கட்டாயப்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.

*ஆபத்தான குற்றவாளிகளுக்கு பரோல் வழங்குவது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் நீதித்துறை மந்திரிக்கு வழங்கப்படும்.

*மனித உரிமைகள் சட்டத்தை பயன்படுத்தி வெளிநாட்டு குற்றவாளிகள் தங்களின் மீதான நாடு கடத்தும் உத்தரவை ஏமாற்றுவதை தடுக்க உரிமைகள் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றுவேன் என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இது அவருக்கு பெண்கள் மத்தியில் புதிய ஆதரவலைகளை ஏற்படுத்துமா என்னும் கேள்வியை எழுப்பி இருக்கின்றது.

Categories

Tech |