Categories
லைப் ஸ்டைல்

பெண்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு… கோரைக்கிழங்கின் அற்புத பயன்கள்…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக அமையும் கோரை கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அப்போது நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். சில உணவுகள் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். அவ்வாறான உணவுகளை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. சில காய்கறிகள் மற்றும் பழங்கள் பல நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன.

அதன்படி கோரைக் கிழங்கு பயன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். கோரைக்கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலேரியா காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. மாத விலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது. வெள்ளைப் போக்கு, இடுப்பு வலி, அடிவயிற்றில் வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்குகிறது. சுருக்கத்தைப் போக்கி தோலுக்கு மென்மை தருகிறது.

Categories

Tech |