தொலைக்காட்சிகளில் சீரியல்களை விட அதிக வரவேற்பை பெற்று வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். அதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், ராக்ஸ்டார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூறமுடியும். அதோடு சில சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் போட்டியும் நிலவும்.
அதில் முதல் இடத்தை பிடிக்க வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம். இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் கலாட்டா ராணி எனும் புதிய நிகழ்ச்சி சேர்ந்துள்ளது கலைஞர் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வேடிக்கையான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.