சியோமி நிறுவனம் விரைவில் சிவி எஸ் அல்லது சிவி 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதுத. தற்போது சியோமி புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு நிறங்களை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய பதிப்பு இதுவரை இந்தியாவில் வெளியாகவில்லை. தற்போது இதன் மேம்பட்ட பதிப்பு CIVI S அல்லது CIVI 2 என்ற பெயருடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
அதன்படி, ஸ்மார்ட்போன் 6.55″ இன்ச் முழு HD பிளஸ் AMOLED தொடுதிரையைக் கொண்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே வளைந்த எட்ஜ் உடன் வருகிறது. LTPO தொழில்நுட்பம் கொண்டிருக்கும் இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் வரலாம். 8GB + 128GB, 12GB + 256GB ஆகிய மெமரி தேர்வுகளுடன் வரலாம். இந்த போனில் திறன்வாய்ந்த 4nm நானோமீட்டர் கட்டமைப்பு கொண்ட Snapdragon 778G Plus புராசஸர் நிறுவப்படலாம். இது சந்தையில் இருக்கும் 7 சீரிஸ் ஸ்னாப்டிராகன் புராசஸர்களில் சக்திவாய்ந்ததாகும். வெள்ளை, இளஞ்சிவப்பு, பிங்க் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.