வாக்களிக்கும் உரிமை என்பது ஜனநாயகத்தின் மூலக்கல் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது ஆகும். எனினும் இது எப்போதும் வழக்கில் இல்லை என்பதுதான் உண்மை. அண்மைக் காலம் வரை ஏராளமான நாடுகள் தங்களது மக்கள் தொகையில் பாதிக்கு வாக்களிக்கும் உரிமையை மறுத்து விட்டது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடத் துவங்கினர். அமெரிக்க நாட்டில் யார் வாக்களிக்கலாம் என்பது தொடர்பாக முடிவுகள் மாநிலங்களுக்கு விடப்பட்டது. கடந்த 1920ல் அங்கீகரிக்கப்பட்ட 19 வயது திருத்தம் பாலினம் பாராமல் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை உறுதிசெய்கிறது.
இன்று பெண்கள் சமத்துவ தினம், பெண்கள் உரிமை ஆர்வலர்களின் சாதனைகளை கொண்டாடுகிறது. மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான தினசரி போராட்டங்களை நமக்கு நினைவூட்டுகிறது. பெண்கள் யாராலும் ஒதுக்கப்படுவதில்லை என்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு கல்வியின் வாயிலாக அதிகாரம் அளிக்க வேண்டும். அதன்பின் அவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க, வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க நிதி தேவைப்படுகிறது.
அன்றைய மரபுகள்:
பெண்களின் சமத்துவ தினம் என்பது பெண்களை மேம்படுத்துவது, அதிகாரம் அளிப்பது போன்றவை ஆகும். அதுமட்டுமல்லாமல் அனைத்து முரண்பாடுகளையும், ஒடுக்குமுறைகளையும் மீறி பெண்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்து இருக்கிறார்கள் என்பதை ஆச்சரியமடைய வைக்கிறது. பொது மரபுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது வாழ்க்கையில் செல்வாக்கு மிக்க பெண்களுக்கு நன்றி தெரிவிப்பது, பெண்களால் நடத்தப்படும் உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பது, பெண்மையை கொண்டாடுவது போன்றவை அடங்கும்.
பெண்களுக்கு அதிகாரமளிக்க ஆதரவு அளிக்கும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுகிறது. வெவ்வேறான மெய்நிகர் மற்றும் நேரலை தளங்களில் பிரபல பெண்கள் விருந்தினர் பேச்சாளர்களாக இடம் பெற்று இருக்கின்றனர். #WomensEqualityDay என்ற ஹேஷ்டேக்கின் கீழ் வெற்றி கதைகள் சமூக ஊடகங்கள் பகிரப்படுகிறது. அதனை தொடர்ந்து பெண்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு தீர்வுகளும், உதவிகளும் ஆன்லைன் சமூகத்தால் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.