Categories
அரசியல்

பெண்களுக்கான அரசு திட்டங்கள்…. இதெல்லாம் இருக்கு?….. இதோ முழு விபரம்….!!!!!

பெண்கள் முன்னேற்றம் அடையும்போது நாடு பல்வேறு மடங்கு முன்னேறும். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களைத் செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் தொடர்பாக காணலாம்.
பெண்கள் பாதுகாப்பு: 
பெண்சிசுக் கொலையை ஒழிப்பதை மையமாக கொண்டது “பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ” திட்டம். இளம்பெண்களுக்கான சேவைகள் தொடர்பான விழிப்புணர்வையும் இது ஏற்படுத்துகிறது. பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சியே இந்தத் திட்டம் ஆகும்.
பணிபுரியும் பெண்கள் விடுதிகள் சிறப்புத் திட்டம்:
வேலை பார்க்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்கும் இடங்கள் கிடைப்பதை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் ஆகும். நகர்ப்புறம், பெருநகரங்கள், பெண்கள் வேலை செய்வதற்கு வாய்ப்பு உள்ள கிராமப்புறங்கள் வரையிலும் இத்திட்டம் செயல்படுகிறது. மேலும் பணிபுரிந்து வரும் குழந்தைகளுக்கான தினப் பராமரிப்பு வசதியையும் இவ்வகை விடுதிகள் கொண்டுள்ளது. ஆகவே வேலை பார்க்கும் மகளிர் விடுதித்திட்டத்திற்கான விபரங்களை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
சகி திட்டம்:
“நிர்பயா” நிதியின் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடம், காவல்துறை, சட்டம், மருத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல இடங்களில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரம் சேவை வசதியோடு ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்திற்கு கட்டணமில்லா உதவி எண் 181 ஆகும்.
தொழில் முனைவோர் அபிவிருத்தித் திட்டம்:
புதிதாகத் தொழில் செய்ய விருப்பம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோர் அபிவிருத்தித் திட்டம் ஏற்றதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் 21-45 வயது வரையுள்ள பெண்கள் கடன் பெறலாம். இதில் 50% பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கடன் தொகையாக ரூபாய் 5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது.
எஸ்.எம்.இ மகிளா பிளஸ்:
சிறு அளவில் தொழில் துவங்க நினைக்கும் பெண்களுக்காக  எஸ்.எம்.இ மகிளா பிளஸ் என்ற சிறப்புத் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்குகிறது. இத்திட்டத்தில் உற்பத்தித் துறைக்கு ரூ.2 கோடி ரூபாயும், சேவைத் துறைக்கு ரூ.1 கோடி வரையிலும் கடன் கொடுக்கப்படும். இதில் ரூபாய் 1 கோடி வரை பிணையம் கேட்கப்படுவதில்லை. இந்த ரூபாய் 1 கோடிக்கு குறு மற்றும் சிறு நிறுவனங்கள் கடன் உத்தரவாத நிதிக்கு அறக்கட்டளை பொறுப்பேற்றுக்கொள்கிறது.
மகிளா இ-ஹாட்:
இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் துவங்கப்பட்ட நேரடி ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் ஆகும். இத்திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது. இதுவும் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Categories

Tech |