சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம்தான் தேசிய சஃபாய் கரம் சாரீஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம்.இதன் முக்கிய நோக்கம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் நிதி உதவி வழங்குவது. இதன் மூலமாக சமூக பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவது ஆகும். அதுமட்டுமல்லாமல் மகிலா அதிகாரிதா யோஜனா கடன் சஃபாய் கரன் சாரி தோட்டி பெண்கள் மற்றும் அவர்களை சார்ந்திருக்கும் மகள்களுக்கு பிராந்திய கிராமப்புற வங்கிகள், மாநில சேனலை சிங் எஜென்சிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்றது.
மகிலா அதிகரிதா யோஜனா கடன் திட்டம் மிக முக்கியமான மாநில சேனலை சிங் ஏஜென்சிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த கடன் திட்டத்தின் கீழ் துப்புரவு பெண்கள் மற்றும் அவர்கள் சார்ந்த மகள்களுக்கு சிறு மற்றும் சிறு வணிகம்,வணிகம் மற்றும் பல்வேறு வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரையிலான திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது.
இதிலுள்ள ஒவ்வொரு திட்டத்தின் கீழும் கடனுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட காலத்திற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலம் மற்றும் 6 மாத கால அவகாசம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் உதவமுடியும். அதன்படி விவசாயத்துறை– கோழி, ஆடு, பால் கறக்கும் விலங்குகள் மற்றும் உரக்கடை போன்றவை.
சேவைத் துறை: ஃபேப்ரிகேஷன் வேலை, ஷட்டரிங், கம்ப்யூட்டர், தச்சு தொழில், , மொபைல் ரிப்பேர், பேட்டரி வைண்டிங் மற்றும் ரிப்பேர் செய்தல், இரு/நான்கு சக்கர வாகனம் பழுது பார்த்தல், முடிதிருத்தும் கடை, ஆட்டோ ரிக்ஷா (பெட்ரோல்), ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் கடை, புகைப்பட நகல் சாவடி, பொது வழங்கல் கடை, மற்றும் மியூசிக் ஸ்டோர் பேட்டரி மின்சார வாகனம் (எரிக்ஷா), சுருக்கப்பட்ட காற்று வாகனம், சூரிய ஆற்றல் கேஜெட்டுகள், பாலி ஹவுஸ் போன்றவை.