தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை தொடங்க உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடன் ஆலோசனை வழங்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற விரும்புபவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் போன்றவற்றை நாளை மறுநாளுக்குள் பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் தனசேகர பெருமாள் இந்த தகவலை கூறியுள்ளார்.