அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியை சேர்ந்த செல்லூர் ராஜு போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஒரு கேள்வி எழுப்பினார்.
அதாவது குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது எனக் கேட்டார். இதற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை 48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதால் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என அறிவிக்க முடியாது என்றார்.