ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணை செயலாளர் மற்றும் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல உதவி குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பெண்களின் உதவி விநியோகத்தில் பங்கேற்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல அது தொடர வேண்டும்.
மேலும் மனிதாபிமான பணிகளில் இருந்து பெண்களை தடை செய்வது அனைத்து ஆப்கானியர்களுக்கும் உடனடி உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் பணியாளர்கள் பற்றாக்குறையால் சில நேர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மனிதாபிமான சமூகமாக தற்போது நாம் எதிர்கொள்ளும் செயல்பாட்டு கட்டுப்பாடுகளை புறக்கணிக்க முடியாது. நாங்கள் உயிர் காக்கும் நேரத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர முயற்சி செய்வோம். ஆனால் பெண் உதவி பணியாளர்கள் இல்லாமல் கொள்கை ரீதியான மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாது என்ற காரணத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும். மேலும் எந்த ஒரு நாடும் அதன் மக்கள் தொகையில் பாதியை சமூகத்திற்கு பங்களிப்பதில் இருந்து விளக்க முடியாது என அதில் கூறப்பட்டுள்ளது.