Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கான திருமண வயது…. இனி அவசரப்படாதீங்க…. மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு….!!

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதானது 18 லிருந்து 21 ஆக அதிகரிப்பதற்கான  திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் பெண்களுக்குரிய திருமண வயதினை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தின விழா அன்று பேசியிருந்தார். மேலும் இதற்காக பரிசீலனைக் குழு ஒன்றை அமைத்து பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது குறித்து திட்டமிடப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த குழுவின் அறிக்கையானது முதலில் ஆலோசிக்கப்படும். அதன் பின்பே இது குறித்த முடிவை மத்திய அரசு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவானது ஜெயா ஜெட்லி தலைமையில் இயங்கவுள்ளது. மேலும் பிரதமர் அலுவலகமானது, இதுகுறித்த விளக்க அறிக்கையை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்த அறிக்கையில் நிபுணர்களின் குழுவானது, பரிந்துரைகள் மற்றும் அவைகளை நடைமுறைப்படுத்த தேவையான வழிமுறைகள் போன்றவற்றை தெளிவாக அறிவித்துள்ளது. மேலும் அரசுத் தரப்பு வட்டாரங்கள் இது குறித்த முடிவுகள் விரைவாக எடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளது. அதாவது தற்போது குறைந்தபட்சம் பெண்களின் திருமண வயதானது 18 ஆக இருக்கிறது. இந்நிலையில் அதனை 21 ஆக அதிகரிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது. சிறு வயதில் பெண்களுக்கு நடத்தப்படும் திருமணங்கள் மற்றும் மகப்பேறு ஆகியவைகளை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ளப்போவதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |