இங்கிலாந்து நாட்டில் ஆயுதப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு சுகாதார அடிப்படையில் இலவச சானிட்டரி வழங்கப்படும் என அமைச்சர் ஹேப்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இங்கிலாந்து நாட்டின்,ஆயுதப்படையில் மொத்தம் 11% பெண்கள் பணிபுரிகின்றனர். ராணுவ நடவடிக்கைளின் போது பெண்களுக்கு சுகாதார பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்பதால் இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு முதல் முறையாக சுகாதார நாப்கின்கள் வழங்க ஆயுதப் படைகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
அதே போல பெண்கள் எடுத்துச் செல்லும் சானிட்டரி பொருட்கள் எல்லாம் தீர்ந்து போனால் அதற்காக அவர்கள் கவலைப்பட தேவையில்லை என்று அந்நாட்டு ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹேப்பி உறுதிப்படுத்தியுள்ளார். அரசின் இந்த திட்டத்துக்கு அந்நாட்டு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.