Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் ரூ.20 ஆயிரம்…. அரசுக்கு அதிரடி கோரிக்கை…!!!!

பெண்களுக்கு மாத சம்பளமாக 20 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட உழைக்கும் பெண்கள் அமைப்பின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டு பேசியபோது, கேரள அரசை போன்று தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

தனியார் துறை, கல்வி நிறுவனம், மருத்துவ நிறுவனம் மற்றும் வீடுகளில் வேலை பார்க்கும் பெண்கள் என அனைவருக்கும் குறைந்த பட்ச சம்பளமாக 20 ஆயிரம் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த சட்டம் கொண்டு வந்து பெண்களின் உழைப்பை மதிக்க வேண்டும். ஆகவே தமிழக அரசு கொண்டு வரக்கூடிய கொள்கை வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தாலும் சட்டமாக்க வேண்டும் எனவும் பெண்களின் பணி நேரம் கணக்கிலெடுக்க வேண்டும்.

மேலும் அண்டை மாநிலத்தில் இருக்கக்கூடிய கவர்னர் தமிழிசை அவர்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு காரணம் அவர்களின் ஆடைகள் என்று கூறியிருக்கிறார். இந்த கருத்து பொருத்தமானதல்ல. நான்கு வயது குழந்தைகள் என்ன ஆடை அணிய முடியும்? குழந்தைகளுக்குரிய ஆடையை தான் அணிய முடியும். பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கூறியுள்ளார்.

Categories

Tech |