Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க…. தமிழக காவல்துறை அசத்தல் நடவடிக்கை…!!!!

தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு விழிப்புணர்வு வாகனம் முதற்கட்டமாக கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லை மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இந்த விழிப்புணர்வு வாகனத்தில் நான்கு புறங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் பெரிய அளவிலான திரை மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து குறும்படம் ஒளிபரப்பு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வசதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த வாகனம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகிய இடங்களுக்கு சென்று குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க வேண்டிய எண்களும் வாகனத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வாகன விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |