Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. 2021 விட 2021 இல் தமிழகத்தில் அதிகம்…. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் துன்புறுத்தால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு எதிராக அரசு என்னதான் அரசு சட்டங்கள் கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி அளித்த பதிலில் தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 36 மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,17,503 ஆக இருந்தது. அது 2021 ஆம் ஆண்டு 4,28,278 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு 6630 குற்றங்கள் பதிவாகி இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அது 8,501 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |