Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு எதிரான கொடுமை…. முதலிடத்தில் கர்நாடகா…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!!!

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தேசியக் குடும்ப நலத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய கலாச்சாரப்படி பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூக அளவில் மாப்பிள்ளை தேடி, அதன் பின் இரு வீட்டுப் பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் படலம் நடைபெற்று, அழைப்பிதழ் அடிப்பது இப்படி பல சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் இப்படி பார்த்து, பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகின்றது. அதாவது வரதட்சணை பிரச்சனை, மாமியார் – மாமனார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமை, கணவர் கொடுமை இது போன்ற பல பிரச்சினைகளால் திருமண பந்தங்கள் பாதியில் முடிந்து விடுகின்றன.

ஆனால் இந்த பிரச்சனைகளில்  அதிக அளவில் பெண்களே  பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் பெண்களுக்கு அதிக கொடுமைகள் தொல்லைகள் கொடுப்பது குறித்து தேசிய குடும்பநலத்துறை ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் இந்திய அளவில் பெண்களுக்கு அதிக கொடுமைகள் மற்றும் தொல்லைகள் கொடுப்பது கர்நாடக மாநிலம் முதலிடத்தை பிடித்து இருக்கின்றது. மேலும் பீகார் மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பின் எந்தெந்த வகையில் பெண்களுக்குக் கொடுமை இழைக்கப்படுகிறது என்பது பற்றியும் தேசியக் குடும்ப நலத்துறை ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

அதில் மனதளவிலும், உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அதிக தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது அந்த பெண்களின் கணவர்கள் தான்  என அதில் கூறப்பட்டுள்ளது.  மேலும் இது தவிர சில கணவர்கள் வெளி உலகிற்கு நல்லவர்களாக இருந்தாலும் மனைவிகளிடம் மற்றும் சைக்கோ போல் நடந்து கொடுமைப்படுத்தும் உண்டு என தெரிவிக்கப்படுகிறது. பெண்களின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தும் தொல்லை கொடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் குடும்ப சண்டையை காரணம் காட்டி அதிக அளவில் பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து வருகின்றது.

இதில் கணவன்மார்கள் தங்களது மனைவிகளை கண் பகுதியில் தாக்குவது மற்றும் கை கால்களை முறிப்பது போன்ற கொடூரமான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. மேலும் பெண்கள் தீ வைக்கும் சம்பவங்களும் கணிசமான அளவு உயர்ந்து இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதில் 27 % பெண்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மூலமாக  பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கின்றனர். 9 % பெண்கள் சமூக அமைப்புகளின் உதவியை நாடுகின்றனர். 2 சதவீத பெண்கள் தாங்களே தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான பெண்களே போலீஸ் மற்றும் கோர்ட்டுகளுக்கு சென்று புகார் அளிப்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

Categories

Tech |