சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ் குமரி, சமூக நலத்துறை இயக்குனர் ரத்னா மற்றும் 181 மகளிர் உதவி மையத்தின் திட்ட தலைவர் ஹரின் பாஸ்கோ, மணல் சிற்பி கஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.