Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு குட் நியூஸ்….! இனி 12லட்சம் கிடைக்கும்…. தமிழக அரசு அதிரடி …!!

சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலுரைக்கு பின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூட்டுறவு தொழிற்பயிற்சி மாணவர்கள் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் அமைத்தல், நியாயவிலை கடைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி வீதத்தை 12 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடன் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படும் எனவும், கைம்பெண்,  கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் எனவும் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டடம் கட்டப்படும் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும்  33 கூட்டுறவு அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |