பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கினை இலவசமாக வழங்குவதாக ஸ்காட்லாந்த் அரசு அறிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் மோனிகா லெனான். இவர் பெண்களின் மாதவிடாய் காலத்தில், அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சுகாதார பொருட்களை இலவசமாக வழங்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதாவில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போது 121 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிகள்,கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் பெண்களுக்கான சுகாதார பொருட்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் உலக நாடுகளிலேயே முதன் முதலில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் நாடாக ஸ்காட்லாந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.