Categories
அரசியல்

பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….! மாதம் 1500 ரூபாய் ஓய்வூதியம்…. உ.பி யில் தேர்தல் வாக்குறுதி….!!

ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு ஓய்வூதியமாக மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தபோது ஏழை பெண்களுக்கு ஆண்டுதோறும் ஓய்வூதியமாக 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இந்தத் திட்டம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது தேர்தல் அறிக்கையில் இந்த ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த முறை நாங்கள் பெண்களுக்கு பயன் அளிக்கும் திட்டத்தை கொண்டு வர உள்ளோம். முதுமை காரணமாக அவதியுற்று வரும் பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வேலைக்கு செல்லாத பெண்களுக்கு இந்த 1500 ரூபாய் பெரும் உதவி புரியும் என நாங்கள் நம்புகிறோம். என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். மேலும் அகிலேஷ் யாதவ் தேர்தலை ஒட்டி மக்களுக்கு பயனுள்ள பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

Categories

Tech |