பெண்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கொறடா கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அரசு கொறடா கோவி செழியன் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சாலைகளில் மொட்டை மாடிகளில் உடற்பயிற்சிகள் செய்கின்றன. ஆனால் வீட்டில் உள்ள பெண்கள் டிவியை பார்த்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜிம் வைத்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். எனவே ஊராட்சி ஒன்றியங்களில் உடற்பயிற்சி கூடம் வைத்துக் கொடுக்க அரசு முன்வர வேண்டும்.
அரசு முன்வந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியிலேயே உபகரணங்கள் வாங்கிக் கொடுக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பெண்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளீர்கள் நன்றி சபாநாயகர் தெரிவித்தார். அதன்பிறகு பதிலளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் உடற்பயிற்சி செய்தால் உடல் நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். எனவே உடற்பயிற்சி செய்வது அவசியம். எதிர் காலத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுமென கூறினார்.