Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் தமிழகம்… மு.க ஸ்டாலின் விமர்சனம்…!!!

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குரும்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என குற்றவாளிகள் அண்மையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் சலூன் கடை காரர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர்.சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் அளித்த பிரேதப்பரிசோதனை அறிக்கை,கைரேகை நிபுணர்களின் அறிக்கை,கொலையாளியின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறுகையில் அரசு சரியான சாட்சியங்களை நிரூபிக்காததால்தான் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக விளங்குகிறது என்ற கருத்தினைத் தெரிவித்துள்ளார். அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |