Categories
மாநில செய்திகள்

“பெண்களுக்கு பிரச்சினையில்லை” தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மாநகரில் புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்கி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 பேருந்துகள் விரைவில் வரவுள்ளது. இந்த முறை வெற்றியடைந்த பின் தமிழகம் முழுவதும் இயக்குவதற்காக மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக நிறைவு பெற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |