நாடு முழுவதும் அரசியல் பதவிகள், அவை உறுப்பினர்கள் போன்ற பல்வேறு இடங்களில் மகளிர் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்தில் பெண்களுக்கான மற்றொரு இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் வாகன நிறுத்தம் செய்யும் இடங்களில் பெண்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அசவுகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மராட்டிய அரசு புதிய முடிவை அறிவித்துள்ளது. அதன்படி மராட்டிய சட்டசபையில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மந்திரி மங்கள் பிரபாத்லோதா கூறியதாவது, “பொது இடங்களில் பெண்களுக்கு பார்க்கிங் பகுதியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் விரைவில் மராட்டியத்தில் மகளிர் வாகன ஓட்டுனர்கள் மட்டும் என்ற பெயர் தாங்கிய பலகைகள் பொது வாகன நிறுத்தும் இடங்களில் வைக்கப்பட இருக்கிறது”. மராட்டிய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இதை மேற்கொண்டுள்ளது.
Categories